10 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…. விவாகரத்து கேட்கும் சினேகா?…. பதிலடி கொடுத்த பிரசன்னா…. வைரல் பதிவு….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

10 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…. விவாகரத்து கேட்கும் சினேகா?…. பதிலடி கொடுத்த பிரசன்னா…. வைரல் பதிவு….!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நடிகை சினேகா பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பத்து வருட திருமண வாழ்க்கையை இருவரும் முடித்துக் கொள்ள இருப்பதாக பரவிய செய்தியை நடிகை சினேகா கேள்வி பட்டுள்ளார்.

Advertisement

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகாவுடன் பிரசன்னா நெருக்கமாக முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை அண்மையில் பகிர்ந்தார். ஆனால் இதையும் நம்பாத சில ஊடகத்தினர் விவாகரத்து செய்தியை வைரலாக்கி வருகிறார்கள். தற்போது சினேகா விற்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறி ஒரு பதிவை போட்டு பிரசன்னா பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in