VIDEOS
“எல்லாமே போலி”…. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மோதல்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு கன்வேயர் வழியாக வரும் பொருளை எடுக்க போட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி பொருளை எடுத்த போது மணிகண்டன் தன்னை அடித்ததாக அமுதவாணன் புகார் தெரிவித்துள்ள நிலையில் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் எனக்கு வேற வேலை இல்ல பாரு என்று அமுத வானனிடம் மணிகண்டன் தெரிவித்தார். நீங்க பிரேம் பண்றீங்கன்னு மணிகண்டன் கூறினார். அதனால் எனக்கு ஒன்றுமே இல்லை என அமுதவாணன் கூறினார். இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்து படு மொக்கை என கமெண்ட் செய்து இருப்பதிலேயே இந்த சீசன்தான் மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு போட்டியாளர் கூட சரியில்லை அனைவரும் போலி என பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
#Day33 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/RfysWp7ceV
— Vijay Television (@vijaytelevision) November 11, 2022
