ரசிகர்களே…. ரெயின்கோட்ட ரெடி பண்ணிக்கோங்க…. இசையமைப்பாளர் அனிருத் அதிரடி அறிவிப்பு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரசிகர்களே…. ரெயின்கோட்ட ரெடி பண்ணிக்கோங்க…. இசையமைப்பாளர் அனிருத் அதிரடி அறிவிப்பு….!!!!

Published

on

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.

அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இசை திரை உலகில் தனது பத்து வருடங்களை அவர் நிறைவு செய்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் ரசிகர்கள் தங்கள் ரெயின் கோட்டை தயார் செய்து கொள்ளுமாறு அனிருத் கேட்டுக் கொண்டுள்ளார். அனிருத்தின் “ஒன்ஸ் அப்பான் எ டைம்” இசை கச்சேரி நாளை கோவையில் நடைபெற உள்ளது. கனமழை காரணமாக அந்த கச்சேரி நடைபெறாது என செய்திகள் வெளியான நிலையில் நாளை எவ்வளவு மழை பெய்தாலும் திட்டமிட்டபடி இசை கச்சேரி நடைபெறும் என அனிருத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in