‘லால் சலாம்’ படப்பிடிப்பு நிறைவு… மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்… வைரலாகும் புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘லால் சலாம்’ படப்பிடிப்பு நிறைவு… மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்… வைரலாகும் புகைப்படங்கள்…

Published

on

சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படம் ‘லால் ஸலாம்’. இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘ லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.


மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். ரஜினிகாந்த் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  சமீபத்தில் இத்திரைப்படத்தின் நடிகர் ரஜினிகாந்த் தனது படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்தார்.

Advertisement

தற்போது,  இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகர் விஷ்ணு விஷால் தன் மனைவியுடன் இணைந்து தனது படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in