LATEST NEWS
அரசியலில் இறங்கும் பிக்பாஸ் புகழ் ஜிபி.முத்து…. அதுவும் எந்த கட்சியில் தெரியுமா?…. அவரே சொன்ன சீக்ரெட்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் அந்த சீசனில் மக்களின் நம்பிக்கையான போட்டியாளராக கொண்டாடப்பட்டவர் ஜி பி முத்து.டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அப்படியே ஒரு யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
அதன் மூலமாக பிரபலமான இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் உள்ளே நுழைந்தவுடன் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். இவர் இறுதி வரை வருவார் என எதிர்பார்த்த நிலையில் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார்.அதன் பிறகு எனக்கு பணம் புகழ் எதுவும் தேவையில்லை தான் முக்கியம் என கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் ஜி.பி. முத்து தனது குடும்பமே அதிமுகவுக்கு ஆதரவானது என்றும் ஜெயலலிதா தான் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து அதிமுக ஐடி விங் அணியினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஜி பி முத்துவை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகின்றது. தற்போது இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
