VIDEOS
பாக்கியலட்சுமி ஷுட்டிங்கில் மீண்டும் இணைந்த கோபி…. அவரே பகிர்ந்த வீடியோ…. என்ன காரணம்….???
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் கதை மற்ற சீரியல்களை விட சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி வீட்டிற்கு வந்திருக்கும் கோபியின் செயல் ரசிகர்களை விறுவிறுப்பாக சீரியலை பார்க்க தூண்டுகிறது. கோபியுடன் தான் நானும் இருப்பேன் என்று ராதிகா பாக்யாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இப்படி சீரியல் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் நான் சீரியலை விட்டு விலகி விடுவேன் என்றும் இதற்கு யாரும் காரணம் இல்லை எனவும் என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை என பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பற்றி பல கிசு கிசுக்கள் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் சதீஷ் தற்போது மீண்டும் பாக்கியலட்சுமி ஷூட்டிங் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதனால் அவர் சீரியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டே மீண்டும் சீரியலில் இணைந்து விட்டாரா என ரசிகர்கள் அனைவரும் கேட்டு வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அதே சமயம் இணையத்தில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் நானே விரைவில் அறிவிக்கிறேன் எனவும் இன்று காலை சதீஷ் ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
