LATEST NEWS
GP முத்துவை கதறி அழுத வைத்த போட்டியாளர்கள்….! செம வைரலாகும் Video….. ஏம்லே இப்டி பண்றீய…..!!!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது இந்த நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என்று 20 பேர் கலந்து கொண்டுள்ளனர். முதலில் கலகலப்பாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் தற்போது வழக்கம் போல் சண்டையை ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் ஆதரவுடன் களமிறங்கியுள்ளார் ஜி பி முத்து. இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளது. ஓவியா ஆர்மி, லாஸ்ட்லியா ஆர்மி போன்று தற்போது ஜி பி முத்துவுக்கும் ஆர்மியை தொடங்கி ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் தலைவரை களம் இறக்கி உள்ளனர்.
பொதுமக்களின் அடையாளத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் தனலட்சுமி. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் ஜிபி முத்து, ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். முதலில் ஜனனி ஆயிஷாவை நாமினேட் செய்தார். இதனால் அவர் வீட்டின் வெளியில் இருக்கும் வாழைப்பழம் பெட்டில் படுத்து உறங்கினார். இதை அடுத்து நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் ஆயிஷா ஜிபி முத்துவை நாமினேட் செய்தார்.
https://twitter.com/drkuttysiva/status/1580268563029295105
அதற்கு அவர் கூறிய காரணம் ஜிபி முத்து பிற அணியினருக்கு உதவி செய்கிறார் என்பதுதான். இதனால் கடுப்பான ஜி பி முத்து வெளியில் அமர்ந்து சாக போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஜனனியையும், ஆயிஷாவையும் தயவு செய்து நீங்க இங்க வராதீங்க என்று கூறினார். உடனே தனலட்சுமி அவர் எல்லாம் தெரிஞ்சு தான் பண்றாரு… ரொம்ப நடிக்காதீங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை கேட்டு டென்ஷனான ஜி பி முத்து நான் நடிக்கிறேனா நீ பார்த்தியா என்று கேட்க… என்ன என்ன நீ போ என்று பேசுகிறீர்கள் என்று கோபப்பட இருவருக்கும் சண்டை தொடங்கியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ஜி பி முத்து ஆதரவாளர்கள் கவலைப்படாதீங்க தலைவரே… நாங்கள் இருக்கோம் உங்களுக்கு என்று கூறி வருகிறார்கள். மேலும் ஜிபி முத்துவை அந்த ஆளு ஒரு லூசு… அவர பார்த்தாலே கடுப்பா வருது.. என்று தனலட்சுமி கூறியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலஹாசன் அவர்கள் இந்த வாரம் வந்து தனலட்சுமி வெளுத்து வாங்குவார் என்று பலரும் தெரிவித்து வாருகின்றனர்.
