LATEST NEWS
திருமணத்திற்காக ஹன்சிகா போட்ட பக்கா பிளான்…. அதுவும் பிரபல நடிகையின் திருமணத்தை போலவே…. தீயாய் பரவும் செய்தி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே ஹன்சிகா தனது நீண்ட நாள் காதலரை வருகின்ற டிசம்பர் நான்காம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இதனை பல புகைப்படங்களை வெளியிட்டு ஹன்சிகாவும் உறுதி செய்துள்ளார்.
இவர்களின் திருமணம் மைசூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்ற போது அதன் ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய நிலையில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் திருமணம் நடந்து முடிந்தது. அவர்களைப் போலவே தற்போது ஹன்சிகாவும் அதனை பின்பற்றி ஒரு பிரபல ஓடிரி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து வருவதாக ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
