Rolex கெட்டப்பில் ‘ஹரால்டு தாஸ்’ அர்ஜுன்… பிறந்தநாள் ஸ்பெஷலாக மிரட்டலாக வெளிவந்த ‘லியோ’ கேரக்டர் கிலிம்ப்ஸ்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

Rolex கெட்டப்பில் ‘ஹரால்டு தாஸ்’ அர்ஜுன்… பிறந்தநாள் ஸ்பெஷலாக மிரட்டலாக வெளிவந்த ‘லியோ’ கேரக்டர் கிலிம்ப்ஸ்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர்  நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜயுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.

இன்னும் சில நாட்களில் லியோ படம் வெளியாக உள்ளது. எனவே தொடர்ந்த லியோ படக் குழு அப்டேடை வெளியிட்டு வருகிறது. அப்படி இதற்கு விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியானது. இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு லியோ படத்தில் வில்லன் சஞ்சய் தத் பிறந்தநாள் ஸ்பெஷலாக கிளிம்ஸ் வீடியோவை இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

Advertisement

கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் விஜய் த்ரிஷா கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லியோ படத்தில் நடித்த நடிகர்களை எங்கு பார்த்தாலும், லியோ படத்தின் அப்டேட்டை தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் கேரக்கடரை ரிவீல் செய்யும் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் இது வரை பார்க்காத மிரட்டலான வகையில் அர்ஜுன் இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in