LATEST NEWS
திரிஷாவின் இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான க்யூட் புகைப்படங்கள்…!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இளவரசி குந்தவை ஆக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார். தற்போது அவர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 40 வயதாகும் திரிஷா இன்னும் இளமையாக இருந்து வருகிறார். தற்போது திரிஷா இளம் பருவத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
