LATEST NEWS
பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளர் இவர்தான்…. அவர அடிச்சுக்க ஆளே இல்ல…. விஜே மகேஸ்வரி ஓபன் டாக்….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மகேஸ்வரி பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில் விக்ரமன் கண்டிப்பாக 100% இறுதிவரை இருப்பார் என தெரிவித்துள்ளார். யாரிடமும் இல்லாத ஒன்று விக்ரமிடம் இருக்கிறது என்றால் அது சரியான நிலைப்பாடு மட்டும்தான். அவர் கண்டிப்பாக பலமான போட்டியாளராக இருந்து வெற்றி பெறுவார் என மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
