VIDEOS
உன்னை என் தங்கச்சியா நினைச்ச, இப்படி அசிங்கப்படித்தீட்டியே…. பிக்பாஸ் போட்டியாளரை அழ வைத்த ஜனனி….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பணியாளர்கள் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. தனலட்சுமி மற்றும் மணிகண்டனுக்கு இடையே சண்டை ஏற்பட்டதை தொடர்ந்து சாப்பாட்டு விஷயத்தில் மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என கேள்வி எழுந்தது. அதற்கு ஜனனி உடனே ஏடிகேவை கூறியுள்ளார். அதனால் கோபமடைந்த ஏ டி கே, உன் மீது தனிப்பட்ட அன்பு எனக்கு இருக்கு, அதை கொச்சைப்படுத்திடிங்க, உன்னை தங்கை போல நினைத்திருந்தேன் என்று கூறி கதறி அழுதார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
#Day32 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/MhG6BAzgft
— Vijay Television (@vijaytelevision) November 10, 2022
