LATEST NEWS
அந்த விஷயத்தில் EX கணவர் நாக சைதன்யாவை…. ஓரம் கட்டி முதலிடத்தை பிடித்த சமந்தா…. இனி இவங்க தான் டாப்….!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் பூ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் சமந்தா நடிப்பில் இன்று வெளியாகி உள்ள யசோதா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் இல் மட்டும் 65 லட்சத்திற்கும் மேல் சமந்தாவின் யசோதா திரைப்படம் வசூல் செய்துள்ளது.
அண்மையில் நாக சைதன்யாவின் நடிப்பில் வெளியான thank you என்ற திரைப்படம் கூட ஹைதராபாத்தில் அட்வான்ஸ் புக்கிங்கில் 63 லட்சம் மட்டுமே வசூல் செய்த நிலையில் நாக சைதன்யாவை ஓரம் கட்டி சமந்தா வசூல் சாதனை படைத்துள்ளார். இதனால் நாக சைதன்யா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
