LATEST NEWS
அம்மாடியோ ஒரு சட்டை இவ்வளவு விலையா?…. நேற்று விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஆடிப் போயிருவீங்க….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளதாகவும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நேற்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்தார். விஜயின் வருகை குறித்து முன்னரே அறிந்த ரசிகர்கள் அங்கு கூடினர். அங்கு மீட்டிங் முடிந்தவுடன் விஜய் வீட்டிற்கு காரில் புறப்பட்டார். செல்லும் வழியில் அவரைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ரசிகர்களுக்கு காரிலிருந்து விஜய் கையசைத்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று அணிந்த சட்டையின் விலை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வாய்ப்பிழக்க வைத்துள்ளது. நேற்று விஜய் வெள்ளை சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்திருந்தார். பார்ப்பதற்கு மிக சிம்பிளாக அந்த உடை இருந்தாலும் அவர் அணிந்து வந்திருந்த வெள்ளை சட்டையும் அந்த பிராண்டும் அதன் விலையும் வாய்ப்பிழக்க வைத்துள்ளது.
அதாவது விஜய் அணிந்து வந்தது BURBERRY பிராண்ட் வகை வெள்ளை சட்டை. அவர் அணிந்து வந்த சட்டையில் அந்த பிராண்ட் லோகோ அப்படியே தெளிவாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் அணிந்து வந்த சட்டையின் விலையைத் தேடிப் பார்த்தபோது அந்த சட்டையின் விலை 32,790 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் ஒரு மாத ஊதியம் அந்த சட்டையின் விலை என கமாண்ட் செய்து பலரும் இந்த செய்தியை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
