அடடே நடிகை அசினின் மகளா இது?…. அச்சு அசல் அம்மாவை போலவே இருக்காங்களே…. லேட்டஸ்ட் கிளிக்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே நடிகை அசினின் மகளா இது?…. அச்சு அசல் அம்மாவை போலவே இருக்காங்களே…. லேட்டஸ்ட் கிளிக்….!!!

Published

on

கேரளாவில் இருந்து தமிழ் திரை உலகில் நுழைந்து சாதித்த நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவுக்கு அடுத்ததாக இருப்பவர் அசின். இவர் முதன்முதலாக கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் கேரளா பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, அஜித்துடன் வரலாறு மற்றும் கமலஹாசன் உடன் தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

Advertisement

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆல் இஸ் வெல் என்ற இந்தி திரைப்படம் தான். இவ்வாறு சினிமாவில் டாப் நடிகையாக இருந்த இவர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோ மேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டே சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது .

இந்நிலையில் சமீபத்தில் அசின் மகள் ஆரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அச்சு அசலாக அசின் போலவே இருக்காங்க என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in