LATEST NEWS
நடிகர் சந்தான பாரதியின் மகன் இந்த பிரபலம் தானா?…. இத்தன நாள் இது தெரியாம போச்சே?…. வெளியான குடும்ப புகைப்படங்கள்…!!!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகராகவும் உள்ளவர்தான் நடிகர் சந்தான பாரதி. குறிப்பாக பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
பெரும்பாலான ரசிகர்களுக்கு இவரை நடிகராக தான் தெரியும். ஒரு திரைப்படத்தில் வடிவேலு நடிக்கும் ஒரு காமெடி காட்சியில் அவர் ஒரு காரில் ஏறி கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சந்தான பாரதியை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்பார்.
அப்போது தான் மலை மீது ஏறி அப்படியே கார்ரோடு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வடிவேலுக்கு பீதியை கிளப்பும் காமெடி என்றும் சசிகலா அவர்கள் கிடையாது.
அதனைப் போலவே மைக்கேல் மதன காமராஜன் முதல் விக்ரம் வரை கமல் நடித்துள்ள பல திரைப்படங்களிலும் இவர் நடித்திருப்பார். கமலின் நெருங்கிய நண்பரான சந்தான பாரதி கமல் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேசமயம் நடிகர் என்பதற்கு முன்பு சந்தான பாரதி ஒரு இயக்குனர் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.90களில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என பல நடிகர்களை வைத்து சூப்பர் படங்களை கொடுத்த இயக்குனர் ஸ்ரீதரிடம் இவர் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
அதன் பிறகு பாரதி வாசு என்ற பெயரில் இருவரும் இணைந்து இயக்கிய திரைப்படம் தான் பன்னீர் புஷ்பங்கள்.கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் பாடல்களே இல்லாமல் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் சந்தான பாரதி.
அதனைப் போலவே என் தமிழ் என் மக்கள், காவலுக்கு கெட்டிக்காரன், சின்ன மாப்பிள்ளை மற்றும் மகாநதி உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
குறிப்பாக இவர் இயக்கிய கமல் நடித்திருந்த குணா மற்றும் மகாநதி ஆகிய திரைப்படங்கள் இன்றும் சிறந்த திரைப்படங்களாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சஞ்சய் பாரதி என்ற ஒரு மகனும் உள்ளார்.
இவர் சிறு வயது குழந்தைகள் கண்டு மகிழ்ந்த சக்திமான் என்ற படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.
மேலும் இவர் தனது தந்தை வழியில் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ் ராசி நேயர்களே என்ற திரைப்படத்தினை இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார்.
இந்நிலையில் சஞ்சய் பாரதியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
