மறைந்த நடிகர் மனோபாலாவின் கடைசி விளம்பர படம் … அதுவும் எந்த நடிகையுடன் தெரியுமா?… இதோ வைரலாகும் வீடியோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் மனோபாலாவின் கடைசி விளம்பர படம் … அதுவும் எந்த நடிகையுடன் தெரியுமா?… இதோ வைரலாகும் வீடியோ…

Published

on

தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியவர் மனோபாலா. இவர்  சில திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார். நடிகர் மனோபாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா, நாகேஷ், அஜித், விஜய் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் காமெடிக்கென்றே ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது.

இவரின் ஒல்லியான தோற்றமும், எதார்த்தமான உடல்மொழியோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதமும் இவரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று என்று கூறலாம். 69 வயதாகும் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

அதன் பிறகு இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டது. சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த மனோபாலா தொடர்ந்து சினிமா துறையில் பணியாற்றி வந்தார். ஆனால் திடீரென கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் மனோபாலா. இதைத்தொடர்ந்து அவர் தனது வீட்டிலேயே காலமானார். அவருடைய இறப்புக்கு ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் ,ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்.

தற்பொழுது நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மனோபாலாவுடன் தான் நடித்த விளம்பர பட வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ‘Miss Uuuu Mano pa’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த விளைபரப்படம் தான் இறுதியாக நடிகர் மனோபாலா நடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in