LATEST NEWS
பிக்பாஸ் வீட்டை விட்டு முக்கிய போட்டியாளரை வெளியேற்றிய கமல்…. இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கல?…. ரசிகர்கள் ஷாக்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து தானாக முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.
அதன் பிறகு இரண்டாவது வாரம் அசல் கோளாறு அவரைத் தொடர்ந்து மூன்றாவது வாரம் செரினா என அடுத்தடுத்து நான்கு பேர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வாரம் ராம் எலிமினேட் செய்யப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது எதிர்பார்க்காத ஒரு டுவிஸ்ட் நடைபெற்று உள்ளது. அதாவது விஜே மகேஸ்வரியை தான் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். அவர் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில் எலிமினேஷன் கார் டீல் அவரின் பெயர் தற்போது இடம்பெற்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
