CINEMA
இது என்ன லாஜிக்…. பாட்ஷாவில் குறை சொன்ன கே எஸ் ரவிக்குமார்…. ரஜினி கொடுத்த அடுத்த வாய்ப்பு….!!
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினி. இவரது நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாட்ஷா. இந்த படத்தின் கதைப்படி மும்பையில் தாதாவாக இருப்பார் பாட்ஷா.
அதன் பிறகு பழையதை விட்டுவிட்டு சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக மாணிக்கம் என்ற பெயரில் இருப்பது போன்றும் ஒரு கட்டத்தில் அவரை தேடி மும்பையில் அவருக்கு எதிராக செயல்பட்ட மார்க் ஆண்டனி கதாபாத்திரத்தில் நடித்த ரகுவரன் வருவது போன்றும் கதை அமைந்திருக்கும்.
இந்த படம் சுமார் 15 மாதங்கள் தியேட்டரில் ஓடி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனிடையே ரஜினியை வைத்து பல படங்கள இயக்கிய கே எஸ் ரவிக்குமார் அவர்கள் பேட்டி ஒன்றில் பாட்ஷா படத்தில் உள்ள குறைகளை ரஜினியிடம் தான் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பாட்ஷா படத்தில் பல வருடங்கள் கழித்து ரஜினியை தேடி வரும் மார்க் ஆண்டனி கதாபாத்திரத்தில் நடித்த ரகுவரனுக்கு வயதாகி தலைமுடிகள் நரைத்திருக்கும். ஆனால் ரஜினிக்கு மட்டும் வயதாகாதா என ரவிக்குமார் அவர்கள் ரஜினியிடம் கேட்டாராம். அதன் பிறகு தான் ரஜினியை வைத்து முத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு கே எஸ் ரவிக்குமாருக்கு கிடைத்ததாம்.
