நான் விரைவில் உடல்நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றி…. ரஜினிகாந்த் அறிக்கை….!! – cinefeeds
Connect with us

CINEMA

நான் விரைவில் உடல்நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றி…. ரஜினிகாந்த் அறிக்கை….!!

Published

on

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலை குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் விரைவில் உடல்நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்கும், என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் நலம் விரும்புவர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் ஆன ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் என்னுடைய உளமாற மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in