“அடக்கடவுளே.. ஆண்கள், பெண்கள் மட்டுமில்ல… பிஞ்சு குழந்தைகளுக்கும் இந்த கதியா..?” இஸ்ரேலிய காவலில் அரங்கேறும் பயங்கரம்.. அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட உலகை உலுக்கும் பகீர் அறிக்கை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கடவுளே.. ஆண்கள், பெண்கள் மட்டுமில்ல… பிஞ்சு குழந்தைகளுக்கும் இந்த கதியா..?” இஸ்ரேலிய காவலில் அரங்கேறும் பயங்கரம்.. அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட உலகை உலுக்கும் பகீர் அறிக்கை..!!

Published

on

சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி சிறுவர்களும் ஆளாக்கப்படுவதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தடியடி, உதை மற்றும் துப்பாக்கியின் பின்பகுதியால் எலும்புகள் முறியும் அளவிற்கு மிகக் கொடூரமாகத் தாக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இவ்வாறு காவலில் வைக்கப்பட்ட பலரது உடல்களில் கடுமையான காயங்கள், மின்சார அதிர்ச்சி அளிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் மற்றும் இரசாயனப் பொருட்களால் ஏற்பட்ட தீக்காயங்களின் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in