CINEMA
“கனவு நிறைவேறிவிட்டது” குக்வித் கோமாளி ‘புகழ்’ போட்ட பதிவு…. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இதற்கிடையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் புகழ் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு கனவு நிறைவேறிவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
தலைவர்❤️ #கனவு நிறைவேறியது❤️❤️❤️ pic.twitter.com/6QFmWQbtKs
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) September 24, 2024