LATEST NEWS
“நீங்க ஒரு மாய மந்திரம் அப்பா”… லால் சலாம் படப்பிடிப்பு நிறைவு… வித்தியாசமான லுக்கில் ரஜினி..!!
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராக முன்னணியின் இடத்தில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ரஜினி. இவர் தற்போது தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று படப்பிடிப்பு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஐஸ்வர்யா ரஜினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் உங்களை வைத்து பணமெடுப்பது ஒரு அதிசயம், நீங்கள் ஒரு மாய மந்திரம் அப்பா என்று தெரிவித்து படக்குழுவினர் அனைவருக்கும் ஐஸ்வர்யா ரஜினி தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கேரக்டரின் கெட்டப்புடன் ரஜினி இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
