LATEST NEWS
“பால் பப்பாளி வெள்ள தக்காளி”…. வெள்ளை நிற புடவையில் ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தினம்தோறும் இந்த சீரியலை பார்க்கும்போது அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா.
இவர் நடிப்பையும் தாண்டி இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி நிறைய விஷயங்களை பதிவு செய்வார்.
அதாவது ஷாப்பிங் செய்வது, வீட்டில் இருக்கும் பொருள்கள் மற்றும் ஹோட்டலுக்கு செல்வது என அனைத்து விஷயங்களையும் அதில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட நிலையில் அதற்கு வெள்ளை நிற புடவையில் அழகாகச் சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
