CINEMA
அட அஜித்தின் ரீல் மகளா இது..? ஹீரோயின் ரேஞ்சிற்கு வளர்ந்துட்டாரே… ஷாக் ஆகிப்போன ரசிகர்கள்..!!

நடிகர் அஜித் மற்றும் சிவா கூட்டணியில் உருவாகி ஹிட் அடித்த படம் வீரம். கடந்த 2014 ஆம் வருடம் வெளியான இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். விதார்த், பாலா, சந்தானம், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அண்ணன் தம்பிகள் அவர்களுக்குள் இருக்கும் பாசம், காதல் அவருடைய ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக இந்த படம் அமைய விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக நல்ல வரவேற்கப்பட்டது.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களுடைய மனதை கவர்ந்தவர் யுவினா. குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் தற்போது முன்னணி நாயகி ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த நாயகி ரெடி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.