CINEMA
18 நாட்களை வெற்றிகரமாக கடந்த Good Bad Ugly… இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கரஸ் தயாரித்தது. த்ரிஷா அர்ஜுன்தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் . பட கலவையான விமர்சனம் பெற்றிருந்தாலும் இந்த படம் முதல் நாளிலிருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் படம் வெளியாகி 18 நாட்கள் வெற்றிகரமாக கடந்துள்ளது. இதுவரை உலக அளவில் இந்த படம் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் 279 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் 300 கோடி பாக்ஸ் ஆபிஸை தொடுகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.