அட இங்கயும் LEO வா..? படம் இப்படிதான் இருக்கும்…! Twist வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…! வைரலாகும் வீடியோ…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அட இங்கயும் LEO வா..?  படம் இப்படிதான் இருக்கும்…!  Twist வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…! வைரலாகும் வீடியோ…!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இவர் நடிப்பில் தற்பொழுது ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாக மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இத்திரைப்படத்தை  எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் சைரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இது மட்டுமின்றி ரிவால்வர் ரீட்டா, ரகுநாதா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி உடன் போலோ சங்கர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

#image_title

தற்பொழுது இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையின் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கெல்லாம் பொறுமையாக பதிலளித்த அவரிடம் லியோ திரைப்படம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘ இங்கயுமா? நான் வேற வேலையா வந்துருக்கேன். படம் கண்டிப்பா சூப்பரா தாங்க இருக்கும்’ என்று கூறினார். இதோ அந்த வீடியோ…

 

Advertisement
Continue Reading
Advertisement