‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்ட ஷாருக்கான்’.. ok sir அதுலென்ன தப்பு இருக்குனு சொன்ன விஜய் சேதுபதி.. funny வீடியோ.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்ட ஷாருக்கான்’.. ok sir அதுலென்ன தப்பு இருக்குனு சொன்ன விஜய் சேதுபதி.. funny வீடியோ..

Published

on

பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், ஷாருக்கான் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஜவான். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தான் ஜவான் படத்தையும் இயக்கியிருந்தார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்க பிரியாமணி, யோகி பாபு சானியா ஐயப்பன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தியில் உருவாகிய இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.  இந்திய அளவில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட  ஜவான் திரைப்படம் தற்பொழுது ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று , வசூலையும் வாரி குவித்து வருகிறது.

Advertisement

இதைத்தொடர்ந்து மும்பையில் ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இயக்குநர் அட்லி, ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி. அனிருத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஷாருக்கானிடம் I love you sir என கூற , இதற்கு பதிலளித்த ஷாருக்கான், ‘நானும் உங்களை நேசிக்கிறேன்.  நாம் திருமணம் செய்துக்கொள்ளலாம். இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடிப்போம்’ என்றார். அதற்கு விஜய் சேதுபதி, ‘ அதில் ஒன்றும் தவறில்லை சார்’ என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Maha (@mahasrk1)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in