LATEST NEWS
CWC சுனிதாவை திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்…. பிரபல தமிழ் நடிகர் ஓபன் டாக்….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அறிமுகமானவர்தான் சந்தோஷ். அந்நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் குறித்த பேச்சுகள் அவ்வபோது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. வழக்கமாக குக் வித் கோமாளி போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நெருக்கமாவார்கள்.ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்களை ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக நெருக்கமாகி விட்டனர்.
அதாவது ஒன்றாக கோவில், பிக்னிக், டின்னர் மற்றும் பார்ட்டி என சொந்த குடும்பம் போல் சேர்ந்து விட்டனர். அவ்வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சுனிதா மற்றும் சந்தோஷ் குறித்த காதல் பேச்சுகள் இணையத்தில் வெளியாகின. ஆனால் அதற்கு சந்தோஷ் உண்மை இல்லை என விளக்கம் அளித்தார். அதேசமயம் சந்தோஷ் எலிமினேட் ஆனவுடன் சுனிதா தேம்பித் தேம்பி அழுதார்.
சந்தோஷ் மற்றும் சுனிதா ஜோடிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இருவரும் ஒன்றாக இணைந்து இன்ஸ்டார் பக்கம் ஒன்றை தொடங்கி அதில் பல போஸ்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனிடையே சந்தோஷ் மற்றும் சுனிதா இருவரும் சேர்ந்து விரைவில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி புனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சர்பட்டா பட நடிகர் சந்தோஷ் பிரதாப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுனிதா உடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.அவர் எனக்கு ஒரு நல்ல தோழி இருந்தாலும் அவரை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
