லவ் டுடே நடிகர் பிரதீப் ரங்கநாதன்… அம்மா, அப்பா, அக்காவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

லவ் டுடே நடிகர் பிரதீப் ரங்கநாதன்… அம்மா, அப்பா, அக்காவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் நுழைந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன்பு இவர் சில குறும்படங்கள் இயக்கியுள்ளார்.

கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் தனது முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அசத்தினார்.

Advertisement

அதன் பிறகு திடீரென ஹீரோவாக நடிக்க போவதாக அவர் அறிவித்திருந்தார். இதற்கு தேவையற்ற வேலை என்று பலரும் கூறி வந்தனர்.

ஆனால் ஏஜிஎஸ் தயாரிப்பில் அவர் இயக்கிய நடித்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கோலிவுட்டில் எமர்ஜிங் ஹீரோவாகவே பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார் என்று கூறலாம்.

Advertisement

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சில திரைப்படங்கள் இயக்குவதாக பிரதீப் ரங்கநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து அமோக வெற்றி பெற்றது.

ஏராளமான புதுமுக கதாபாத்திரங்கள் லவ் டுடே திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த நிலையில் லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி தயாரிப்பாளர்கள் பிரதீப் ரங்க நாதனை அணுகி வருகின்றனர். அதே சமயம் சமீபத்தில் விஜய் கால் சூட் இவருக்கு கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குகிறீர்களா என அர்ச்சனா கல்பாத்தி முதலில் இவருக்கு தான் அந்த ஆஃபரை கொடுத்துள்ளார். ஆனால் பிரதீப் ரங்கநாதன் அதற்கு மறுத்துவிட்ட நிலையில் தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

Advertisement

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ள நிலையில் இனிமேல் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

அப்படியே ஏக்கினாலும் தன்னுடைய படங்களை தானே இயக்கி நடிக்க முடிவில் பிரதீப் ரங்கநாதன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு உடன் பிறந்த அக்காவும் அண்ணனும் உள்ளார்.

Advertisement

தற்போது பிரதீப் ரங்கநாதன் தனது அம்மா, அப்பா மற்றும் அக்காவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in