LATEST NEWS
மேடம் உங்களுக்கு எப்போ திருமணம்?…. முதன்முறையாக ஓப்பனாக பதில் சொன்ன கீர்த்தி சுரேஷ்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ஒருவர் திருமணம் பற்றி கேட்க அதற்கு பதில் சொல்ல ஒரு வடிவேலு போட்டோவை கீர்த்தி சுரேஷ் பதிலாக கொடுத்துள்ளார். ஒரு தொழிலதிபருடன் கீர்த்தி சுரேஷ் காதலில் இருந்து வருவதாகவும் விரைவில் திருமணம் என சமீபத்தில் பல செய்தி இணையத்தில் உலா வந்ததை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்போது இந்த பதிலை கூறியுள்ளார்.
