முதல் மனைவி இறந்த ஆறே மாதத்தில் மறுமணம் செய்த மதுரை முத்து…. வெளியான குடும்ப புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல் மனைவி இறந்த ஆறே மாதத்தில் மறுமணம் செய்த மதுரை முத்து…. வெளியான குடும்ப புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழகத்தில் மதுரை முத்து என்ற பெயரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய நகைச்சுவையால் பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்துள்ளார்.

பல வருடங்களாக நகைச்சுவை செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் பல சேனல்களில் பணியாற்றினாலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது விஜய் தொலைக்காட்சி தான்.

Advertisement

அதனால் தற்போது மதுரை முத்து அங்கேயே தங்கிவிட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

அதனைப் போலவே கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக வந்து தனியாக பல நகைச்சுவைகளை செய்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

Advertisement

மேலும் youtube சேனல் வைத்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் லோகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி அவரின் மனைவி உயிரிழந்தார்.

மதுரை பிள்ளையார்பட்டி செல்வதற்காக டிரைவர் கண்ணனுடன் அவர் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென விபத்துக்குள்ளாகி அந்த விபத்தில் லோகா பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து மனைவி இழந்த சில மாதத்திற்குள்ளேயே தன்னுடைய மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரை முத்து திருமணம் செய்து கொண்டார்.

மனைவி இழந்து ஆறு மாதத்திலேயே மதுரை முத்து மறுமணம் செய்து கொண்டதால் பலரும் அவரை விமர்சித்தனர்.

Advertisement

இருந்தாலும் தனக்கு வயதான பெற்றோர் மற்றும் இரண்டு மகள்கள் இருப்பதால் அவர்களுக்காகத்தான் திருமணம் செய்து கொண்டேன் என்று மதுரை முத்து விளக்கமளித்தார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்ததாகவும் அவரின் கணவர் அவரை விட்டுச் சென்று விட்டதால் மிகுந்த மனவேதனையில் இருந்து அவரை தனது குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாகவும் மதுரை முத்து தெரிவித்தார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்த சமயத்தில் பாதையில் தனது வாழ்க்கை முடிந்து விட்டதாக மதுரை முத்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரை முத்துவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in