LATEST NEWS
பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய பிரபலம் மாற்றம்?…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…. யார் அவர்….????
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது.
வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டார்.
தற்போது இரண்டாவது மனைவியுடன் கோபி அவஸ்தைப்படும் காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் அதனை ரசித்து வருகிறார்கள். தற்போது சமூக வலைத்தளங்களில் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாபாக நடிக்கும் ரேஷ்மாவுடன் புதிதாக சீரியல் நடிகர் சஞ்சீவ் இருப்பது போல புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் கோபி வேடம் மாற்றப்பட்டதா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் உண்மையில் ரேஷ்மா மற்றும் சஞ்சீவி இருவரும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். அந்தப் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
