LATEST NEWS
அம்மா ஆனார் ரோஜா சீரியல் நடிகை…. என்ன குழந்தை தெரியுமா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே அக்ஷயா.இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் கதாநாயகிக்கு இணையாக தனது அசாத்தியமான நடிப்பால் பலரையும் மிரட்டியுள்ளார். இவரின் வில்லங்கத்தை பார்த்து ஒருபுறம் ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும் இவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அக்ஷயா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தாயும் சேயும் நலம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
