என் அண்ணன் பிக்பாஸ் வீட்டில் வேணும்னே இப்படி பண்றான், எனக்கு டவுட்டா இருக்கு…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என் அண்ணன் பிக்பாஸ் வீட்டில் வேணும்னே இப்படி பண்றான், எனக்கு டவுட்டா இருக்கு…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் நாம் பார்த்த முகங்கள் பலரும் போட்டியாளராக களமிறங்கியுள்ளனர். அதில் ஒரு சிலர் புதிய அறிமுகமாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து விளையாடி வருகிறார்கள். அப்படி நமக்கு தெரிந்த முகமாக பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக களமிறங்கியுள்ளவர்தான் மணிகண்டன்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்ற மணிகண்டன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் உடன்பிறந்த அண்ணன். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக மணிகண்டன் தனலட்சுமி உடன் பல வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து நிறைய சண்டைகளும் போடுகிறார்.

Advertisement

இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவிடம் பிக் பாஸில் இருக்கும் அவரின் அண்ணன் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், உண்மையாகவே புஜ்ஜி ஒரு ஜாலியான பர்சன்ட் தான்.

பிக் பாஸ் வீட்டில் ரொம்ப சீரியஸாக இருக்கான், அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை? இரண்டு நாளைக்கு முன்பு கூட அவன் சண்டை போட்டான். அது அவனோட கேரக்டரே கிடையாது, ஒருவேளை பிக் பாஸ் வீட்டிற்குள் போனால் அப்படி மாறி விடுவாங்களா? அல்லது அவன் வேணும்னே பண்ணுறான்னு டவுட்டா இருக்கு என ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in