மேடையில் சைகை மொழியில் பேசி இதயத்தை வென்ற ‘நாடோடிகள்’ பட நடிகை… கண்கலங்கிய விஷால்… வீடியோ வைரல்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

மேடையில் சைகை மொழியில் பேசி இதயத்தை வென்ற ‘நாடோடிகள்’ பட நடிகை… கண்கலங்கிய விஷால்… வீடியோ வைரல்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் விஷால். தற்பொழுது விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி இன்னும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்க, 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது.  இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.தற்பொழுது இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள்  மிக வேகமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

Advertisement

இந்த விழாவில் சைகை மொழியில் பேசிய நடிகை அபிநயா ‘விஷால் என் Dream Hero! ‘ எனக்கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார். நடிகை அபிநயா வாய் பேச முடியாதவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மேடையில் அவர் சைகை மொழியில் பேச அதைப்பார்த்த நடிகர் விஷாலும் கண்கலங்கி விட்டார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Cinema Vikatan (@cinemavikatan)

Advertisement
Continue Reading
Advertisement