LATEST NEWS
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிவாஷினி…. மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?…. கேட்டா தலையே சுத்துது….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அசீம் வெளியேறுவார் என போட்டியாளர்கள் அனைவரும் கூறிய நிலையில் கமல்ஹாசன் எலிமினேட் கார்டில் நிவாஷினி பெயரை காட்டியது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து நிவாஷினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஒரு நாளைக்கு 18,000 வரை நிவாஸினி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது சுமார் 7,56,000 ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு நிவாஷினி வெளியேறியுள்ளார்.
