“எங்க வலி யாருக்குமே புரியாது”…. மீம் போட்டு வருத்தம் தெரிவித்த யோகி பாபு…. கலங்கி போன ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க வலி யாருக்குமே புரியாது”…. மீம் போட்டு வருத்தம் தெரிவித்த யோகி பாபு…. கலங்கி போன ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்தப் படத்திற்கு பிறகு தான் பாபு என்ற தனது பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார்.

திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மான் கராத்தே மற்றும் யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக காக்கா முட்டை என்ற திரைப்படம் தான் இவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தனியாக பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் உருவ கேலி குறித்து நடிகர் யோகி பாபு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்த மீம் ரசிகர்கள் பலரை சிந்திக்க வைத்துள்ளது. அந்த பதிவில், வெள்ளையா ஒல்லியா இருந்தா அழகுன்னு சொல்றாங்க, என்ன மாதிரி குண்டா இருந்தா கலாய்க்கிறாங்க, உருவ கேலி செய்றாங்க,எங்களோட கஷ்டமும் வலியும் யாருக்குமே புரியாது என அவர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in