LATEST NEWS
அய்யோ, இப்படி ஒரு சோகமா?…. 24 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த இளம் நடிகை…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!
பெங்காலி நடிகையான ஆண்ட்ரில்லா சர்மா என்பவர் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இவர் கடந்த நவம்பர் மாதம் brain stroke ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கேன்சரில் இருந்து இரண்டு முறை முழுமையாக குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் உடல்நிலை மோசம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ஒரு மணிக்கு அவர் உயிரிழந்தார். இவருக்கு வயது 24 மட்டுமே ஆகும் நிலையில் இவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
