LATEST NEWS
திடீரென திருமணத்தை முடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை…. வைரலாகும் புகைப்படம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் வினு என்பவருடன் இன்று ரித்திகாவுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. இதனை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
