ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட இயக்குனர்களும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்… என்னவா இருக்கும்?… ஒன்னும் புரியலையே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட இயக்குனர்களும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்… என்னவா இருக்கும்?… ஒன்னும் புரியலையே…

Published

on

இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளில் தமிழ் திரைப்பட இயக்குநர்களும், நடிகர்களும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவர் இயக்குனர் சங்கர். இவரின் படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமாகவே பார்க்கப்படுகிறது. இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ரஜினியின் 2.0.

 

Advertisement

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்பொழுது இவர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2, மற்றும் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் போன்ற படங்களை இயக்கிக் கொண்டு வருகிறார். இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

தமிழ்  சினிமாவில் விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அதிதி ஷங்கர். இதை தொடர்ந்து  சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.படங்களில் மட்டுமின்றி விளம்பர படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement

இந்த நிலையில் இவர் தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளை கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2 பட குழுவினரோடு சந்தோஷமாக கொண்டாடியுள்ளார். மேலும் தன்னுடைய திரையுலக நண்பர்களுக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் இவருடைய பிறந்தநாள் பங்க்ஷனில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், சசி, வெற்றிமாறன், கௌதம் மேனன், எஸ் ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், விக்னேஷ் சிவன், லிங்குசாமி போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களும், நடிகர்களான சியான் விக்ரம், ராம்சரண் போன்றோர்கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இப்புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in