ப்ளீஸ்…. யாரும் அதைக் கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க…. ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ண சிம்பு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ப்ளீஸ்…. யாரும் அதைக் கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க…. ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ண சிம்பு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றதால் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகிழ்ச்சி அடைந்தார்.

அதேசமயம் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்புவுக்கு விலை உயர்ந்த டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரை பரிசாக வழங்கினார். அதனைப் போலவே இயக்குனர் கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு புல்லட்டை பரிசாக வழங்கினார்.இந்நிலையில் படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்ற நிலையில் அப்போது பேசிய சிம்பு, ரசிகர்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Advertisement

அனைத்து ரசிகர்களும் ஹீரோவை தூக்கி மேலே வைப்பாங்க. ஆனால் நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைக்கிறவன். என் படத்திற்கு மட்டுமல்ல எல்லோருடைய படத்திற்கான அப்டேட்டும் கேட்டு ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க என சிம்பு அட்வைஸ் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in