மேடம் எங்ககூட ஒரு செல்ஃபீ ப்ளீஸ்…! காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த பொன்னியின் செல்வன் பட நடிகை…! - cinefeeds
Connect with us

TRENDING

மேடம் எங்ககூட ஒரு செல்ஃபீ  ப்ளீஸ்…! காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த பொன்னியின் செல்வன் பட நடிகை…!

Published

on

‘ஜெகமே தந்திரம் ‘என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது. இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கட்டாகுஸ்தி திரைப்படமும் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது. சினிமாவில் நுழையும் முன்பே மாடல் அழகியாக வலம் வந்த இவர் பல்வேறு விதமான போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்பொழுது பகிர்ந்து வருவார். இவர் தற்பொழுது தமிழ், தெலுங்கு ,மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

Advertisement

 


இந்த நிலையில் தான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி , சாமி தரிசனம் மேற்கொண்டு பின் அவருக்கு திருக்கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் பிரகாரத்தினை வலம் வந்து கொடிமரத்தினை வணங்கி வழிபட்டார். அப்போது அவரை கண்ட சாமி தரிசனம் செய்திட வருகைதந்த பொதுமக்கள் பலரும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in