VIDEOS
கேரவனில் கிளாமர் காட்டி வீடியோ வெளியிட்ட பொன்னியின் செல்வன் பட நடிகை…. வாயை பிளந்த ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.
கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
இதில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்தத் திரைப்படத்தில் நடித்த சோபிதா இணையத்தில் கேரவனில் எடுத்த ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி உடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
