தனி விமானத்தில் டெல்லிக்கு கிளம்பிய பொன்னியின் செல்வன் படக்குழு…. வெளியான புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனி விமானத்தில் டெல்லிக்கு கிளம்பிய பொன்னியின் செல்வன் படக்குழு…. வெளியான புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன்.

இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் இந்த மாதம்  28ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement

முதல் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அனைவராலும் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் படம் வசூல் சாதனை படைத்தது.

அடுத்ததாக இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக் குழு அறிவித்தது.

Advertisement

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

Advertisement

கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

Advertisement

இதில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த திரைப்படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஒவ்வொரு ஊருக்கும் சென்று வருகின்றனர்.

Advertisement

சமீபத்தில் அவர்கள் கோயம்புத்தூர் சென்று இருந்த நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷனுகாக பொன்னியின் செல்வன் பட குழு டெல்லி சென்றுள்ளது.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in