LATEST NEWS
கோலாகலமாக நடந்து முடிந்த பிரபல யூடியூபர் திருமணம்…. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்….!!!
இன்று எரும சாணி விஜய் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவருக்கு டிஜிட்டல் உலகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்து விட்டார்.
முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
அதே சமயம் அருள்நிதி நடிப்பில் வெளியான டி ப்ளாக் என்ற திரைப்படத்தையும் இயக்கி வெற்றி கொடுத்தார்.
நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
Youtube இல் இருந்து அடுத்த கட்டமாக ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு, நான் சிரித்தால் உள்ளிட்டா பல திரைப்படங்களில் என்ட்ரி கொடுத்தார்.
அருள்நிதி ஹீரோவாக நடித்த D பிலாக் திரைப்படத்தை இவர்தான் இயக்கினார்.இவர் இயக்கிய இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான நக்ஷத்ராவை திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர்கள் முன்னிலையில் நேற்று இந்த காதல் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு புதுமண தம்பதியினரை வாழ்த்தினர்.
அதை தொடர்பான புகைப்படங்களை எரும சாணி விஜய் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த வருடம் இந்த தம்பதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இந்த வருடம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் வைரலாகி வர பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
