IPL மேட்ச் பார்க்க மகனுடன் வந்த பிரபுதேவா…. இவ்வளவு பெரிய மகனா?… லேட்டஸ்ட் புகைப்படம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

IPL மேட்ச் பார்க்க மகனுடன் வந்த பிரபுதேவா…. இவ்வளவு பெரிய மகனா?… லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

Published

on

தென்னிந்திய சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் தான் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவரின் நடனத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் மற்றொரு பக்கம் இவரின் நடிப்பிற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது.

அந்த அளவிற்கு நடிப்பின் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இப்படி பல்வேறு புகழுக்குரிய பிரபுதேவா கடந்த 1995 ஆம் ஆண்டு ராம் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தநாள். இதனிடையே பிரபுதேவா மற்றும் நடிகை நயன்தாரா இடையே திடீரென காதல் மலர்ந்தது.

Advertisement

இதனால் பிரபுதேவாவின் முதல் மனைவி போலீசில் புகார் அளிக்க சென்ற நிலையில் தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து நயன்தாராவின் காதலும் முறிந்து போனது. அப்போதிலிருந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா கடந்த 2020 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்ற ஹிமானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபுதேவா இறுதியாக பகிரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இவரின் நடிப்பில் பிளாஷ்பேக் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.

Advertisement

இதனிடையே பிரபுதேவாவின் நடன வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது பிரபுதேவா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு தனது மகனுடன் அவர் சென்றுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in