தமிழ் சினிமாவை புரட்டி போட்ட சினிமா பிரபலம் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவை புரட்டி போட்ட சினிமா பிரபலம் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

Published

on

தமிழ் சினிமாவை புரட்டி போட்ட 16 வயதினிலே திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ ராஜ்கண்ணு இன்று காலமானார். இவருக்கு வயது 80. கிழக்கே போகும் ரயில், கன்னி பருவத்திலேயே, மகாநதி மற்றும் எங்க சின்ன ராசா உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களை தயாரித்த பெருமை இவருக்கே சேரும். இந்த படங்கள் அனைத்துமே இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன.

இவர் இன்று காலமான நிலையில் இவரின் மறைவிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவரின் உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in