LATEST NEWS
ரஜினிக்கு வெற்றிமாறன் சொன்ன கதை…. தலைவர் என்ன சொன்னார் தெரியுமா?….. இது எப்ப நடந்துச்சு….!!!!
தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். சினிமாவில் தற்போது வரை 15 ஆண்டுகளை கடந்த இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து தான். ஆனால் அந்த ஐந்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். தமிழ் ரசிகர்கள் பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆனால் அந்த படத்தில் நடித்திருந்த நடிகருக்காக படத்திற்கு செல்வார்கள். இல்லையெனில் நடிகைகளுக்காக படத்திற்கு செல்வார்கள். ஆனால் இவரின் படங்களை நம்பி செல்லலாம் என்ற அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் வெற்றிமாறன்.
பெரும்பாலும் தனுஷை வைத்து மட்டுமே படங்களை இயக்கி வருகிறார். இவர் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்திலும் நடித்த வருகிறார்கள். விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. விடுதலை இந்த திரைப்படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த திரைப்படத்தின் வெளியீடு தேதி குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. கூடிய விரைவில் இது குறித்து அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் வைத்து ஒரு படம் இயக்குவதற்கு அவரிடம் கதையை கூறியுள்ளார். ஆனால் அந்த படம் முழுவதும் பாலிடிக்ஸ் அதிகமாக இருப்பதால் ரஜினிகாந்த் இதை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
ஷூ ஆஃப் தி டெத் என்ற நாவலை அடிப்படையாக வைத்து தான் இந்த கதை தயார்செய்யப்பட்டது. அக்கதை விவசாயிகளின் தற்கொலையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. இது போன்ற ஒரு விஷயத்தை ரஜினிகாந்த் செய்தால் நன்றாக இருக்கும் என்பதால் அதை சொன்னேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார் என்று கூறுகிறார்.
