VIDEOS
வேற லெவலில் பிறந்த நாளை கொண்டாடிய விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்… தீயாய் பரவும் வீடியோ..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜயின் திரைப்படத்தை தொடங்கி வைத்தது அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். அவர்தான் தன்னுடைய மகனை முதலில் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ் சினிமாவில் முதலில் தனது அப்பாவின் இயக்கத்தில் சில திரைப்படங்களில் நடித்த பிறகு தான் விஜய் மற்ற இயக்குனர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினார்.
தற்போது விஜயின் 67வது திரைப்படமான லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் ராடன் நிறுவனம் தயாரிப்பில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். தற்போதைய சீரியலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
